பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர் குறித்து விபரங்களை அளிக்க அறிவுரை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாட்டில் அதிகரித்து வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளி மாநிலத்தவர்கள், வெளி நாட்டவர்களின் பட்டியலை, கிராம நிர்வாக அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் இதர தேவைகள் அவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்கள் வெளியில் நடமாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், அவர்களுக்கு, உடல் நலக் குறைவு ஏதேனும் இருந்தால், அது குறித்த விபரங்களை, அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த அறிவுரையை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X