சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் ஆண்டவர்நகரை சேர்ந்தவர் பிரதீபன், 28. தனியார் நிறுவனத்தில், பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அஞ்சலிதேவி, 27. இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது, அவர்களுக்கு, எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. அஞ்சலிதேவி, கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில், வழக்கம் போல், குடும்பத்தகராறு ஏற்பட்டது. காலை, 9:30 மணிக்கு, பிரதீபன், வேலைக்கு சென்றுவிட்டார். மதியம், 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, மின் விசிறியில் அஞ்சலிதேவி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அருகில், குழந்தை, உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அதிர்ச்சியடைந்த பிரதீபன், இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அஞ்சலிதேவி ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன், அஞ்சலிதேவி, குழந்தைக்கு விஷம் கொடுத்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ய முயன்றது தெரிதது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X