பொது செய்தி

தமிழ்நாடு

300 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு பிரிவு: ஆய்வில் கலெக்டர் தகவல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கரூர்: ''கொரோனா வைரஸ் சிகிச்சை சிறப்பு பிரிவு, 300 படுக்கைகளுடன் தொடங்கப்பட உள்ளது,'' என, கலெக்டர் அன்பழகன் கூறினார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 'கொரோனா' தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவ பிரிவை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவமனையில், ஏற்கனவே, 30 படுக்கைகளுடன் கூடிய கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, ஏழாவது தளம் முழுவதும் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவ பிரிவாக உருவாக்கும் வகையில், 300 படுக்கைகள் கொண்ட பிரிவு அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ பிரிவில், அனைத்து வகையான மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து விவசாய கூலியாக பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய, 123 பேர், மஹாராஷ்டிரா மற்றும் மும்பையிலிருந்து வந்த, 79 பேருக்கு முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எவ்வித தொற்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, டி.ஆர்.ஓ., சந்தியா, உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X