பொது செய்தி

தமிழ்நாடு

மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் எடுப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் பொதுக்குழாயில் தண்ணீர் சரிவர சப்ளை இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகராட்சியில், 48 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில வார்டுக்குட் பட்ட பகுதிகளில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக, நகராட்சி மூலம் பொது குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குடிநீர் வரும் நாளன்று பெரும்பாலான வீட்டுக்காரர்கள் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சு கின்றனர். இதனால் குடிநீர் இணைப்பு இல்லாமல், பொது குழாய்களை நம்பியுள்ள பொது மக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை. 'சொத்து, வீட்டுவரி போன்ற அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும்' என்று கூறி, அறிவிப்பு செய்யும் கரூர் நகராட்சி நிர்வாகம், மக்களுக்கு சரியான முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிப்பது இல்லை. மேலும், மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கப்படும் வியாபார நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பணிபுரியும் நகராட்சி அலுவலர்களுக்கு 'பலமான கவனிப்பு' கிடைப்பதால், அவர்கள் எதையும் கண்டுகொள்வது இல்லை. மேலும், பெரும்பாலான வீட்டு இணைப்புகளுக்கு முறையான குடிநீர் வருவதில்லை. குறைந்த அழுத்த குடிநீர் மட்டும் வருகிறது. சில பகுதிகளில் குடிநீருக்காக பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பெரும்பாலான பகுதி களுக்கு இரவு, 9:00 மணிக்கு மேல் தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், மக்கள் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை. சிலநேரங்களில் தண்ணீர் வீணாக கீழே செல்கிறது. குடிநீரை பிடிக்க முடியாமல் ஆழ்குழாயில் வரும் உப்பு நீரை பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில், கோடைக்காலம் துவங்கிய நிலையில், வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் வெயிலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொது குழாய்களை நம்பி தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள் வசதிக்காக, விதிமுறைகளை மீறி, மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X