பொது செய்தி

தமிழ்நாடு

தாதம்பாளையம் ஏரிக்கு ஆற்று உபரிநீர்: ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

கரூர்: அமராவதி ஆற்றில், அதிகப்படியான தண்ணீர் வரும் காலத்தில், நீரை சேமித்து வைக்க, அணைப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம், 3,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில், மழைக்காலங்களில் ராஜ வாய்க்காலில் அதிகப்படியாக செல்லும் தண்ணீர், வாய்க்காலை உடைத்துக் கொண்டு விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால், மாற்று ஏற்பாடாக, 1881ம் ஆண்டு கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பெரிய தாதம்பாளையத்தில், 360 ஏக்கரில் ஏரியை உருவாக்கி அதில் தண்ணீர் சேமிக்கப்பட்டது.இந்த நீர் வறட்சி காலங்களில், வடகிழக்கு பகுதியில் உள்ள நீர் போக்கி மூலம் வெளியேற்றப்பட்டு, கரூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப் பட்டது. நாளடைவில் தாதம்பாளையம் ஏரிக்கு வரும், நீர் வரத்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்து தற்போது முழுவதுமாக வற்றியுள்ளது. இதனால், கரூர், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சபட்டி ஏரிக்கு, காவிரியாற்றில் இருந்து உபரி நீர் கொண்டு செல்ல, ஆய்வுப் பணிக்காக, 10 லட்ச ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, 1950ம் ஆண்டு அணைப்பாளையத்தில் இருந்து, முடிகணம், தொட்டிவாடி, எருமைப்பட்டி புதூர் வழியாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, பெரிய தாதம்பாளையம் ஏரி, 1970ம் ஆண்டு பொதுப்பணி துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, வனத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. ஒரு காலத்தில், கடல் போல காட்சியளித்த தாதம்பாளையம் ஏரி தற்போது, பாலைவனம் போல் உள்ளது. இறுதியாக, 2002ல், 16 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆறு நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட திட்டமும் கிடப்பில் உள்ளது. அமராவதி வெள்ள நீர் உபரி திட்டத்தை செயல்படுத்தினால், சின்னமுத்தாம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லிசெல்லி பாளையம் குளம், தொட்டிவாடி குளம், நிமித்தப்பட்டி குளம், கிழுவம்பாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், 75க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும், 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால், பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கியது போல, தாதம்பாளையம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு வர, ஆய்வு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஏரி நிலவரம்: ஏரியின் பரப்பளவு, 360 ஏக்கர், ஏரியின் ஆழம் முன்பு, 20 அடி தற்போது, 10 அடி. ஏரியின் கொள்ளளவு, 0.3640 மில்லியன் க.மீ., ஏரியின் கரைபரப்பு, நான்கு அடி அகல கரை, பாசன பரப்பு, 15 ஆயிரம் ஏக்கர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X