பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா? கரூர் நகராட்சியின், பெரும்பாலான பகுதியில், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சேதம் அடைந்த பல போர்வெல் குழாய்களிலும், தண்ணீர் வருவது இல்லை. இந்நிலையில், கரூர் சத்தியமூர்த்தி நகரில் குழாய் உடைந்து, குடிநீர் சாக்கடையில் செல்கிறது. குழாய் உடைப்பு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும், சரி செய்யப்படவில்லை. சத்தியமூர்த்தி பகுதிக்கு, தண்ணீர் திறக்கும் போதெல்லாம், குடிநீர் வீணாகிறது. அதை சரி செய்ய வேண்டும்.
சாலை சேதம்; மக்கள் அவதி: கரூர் முத்துலாடம்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நாள்தோறும் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், டூவீலர்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். விபத்து வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சின்டெக்ஸ் தொட்டி மாற்ற வேண்டும்: கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி மற்றும் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குழாயை மாற்றி, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும்.

செடிகள் படர்ந்த மின்மாற்றி கம்பம்: கரூர், இந்திரா நகரில், மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ள, சிமென்ட் கம்பம் சேதமடைந்து, எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும், கம்பத்தில் அதிகளவில் செடிகள் படர்ந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. சேதமான நிலையில் உள்ள சிமென்ட் கம்பம், கீழே விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

குப்பை குவிப்பு; சுகாதார சீர்கேடு: கரூர், வடக்கு காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில், சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிலிருந்து கடும் துர்நாற்றமும் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், குப்பையை நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X