குடிமகன்களால் பெண்கள் தவிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த வாரம் முதல், டாஸ்மாக் பார்கள், ஓட்டல் பார்கள் மூடப்பட்டன. நேற்று முன்தினம், ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்தது. நேற்று மதியம், 12.00 மணிக்கு கடை திறந்தவுடன் குடிமகன்கள் கூட்டம் அலை மோதியது. கரூர் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வெளியே சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குடிமகன்கள், கடையின் வாசல் பகுதியிலோ அல்லது சாலைகளின் ஓரத்திலோ நின்று மது அருந்தினர். போதை அதிகரித்து, சில நேரங்களில் சாலைகளில் வந்து ரகளை செய்கின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில், கூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை வழியாக செல்லும் பெண்கள் உட்பட பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், கூட்டம் கூடுவதை தவிர்க்க பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை உணராமல், 25க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். இன்று முதல், '144' அமலுக்கு வருவதால், டாஸ்மாக் மூடப்படும் நிலையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X