விபத்து ஏற்படும் பகுதிகளில் பேரிகார்டு வைக்க கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ் சாலைகளில், அடிக்கடி விபத்து கள் ஏற்படுகின்றன. அதை தடுக்க, பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரை சுற்றி, மதுரை, திருச்சி, சேலம், கோவை நெடுஞ்சாலைகள், ஈரோடு மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நாள் தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இணையும், கிராம

கரூர்: கரூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ் சாலைகளில், அடிக்கடி விபத்து கள் ஏற்படுகின்றன. அதை தடுக்க, பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரை சுற்றி, மதுரை, திருச்சி, சேலம், கோவை நெடுஞ்சாலைகள், ஈரோடு மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நாள் தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இணையும், கிராம சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதனால், அதிக எண்ணிக்கையில் விபத்து ஏற்படும், கோடங்கிப்பட்டி, வெங்க கல்பட்டி, வீர ராக்கியம், சுக்காலியூர் பிரிவு மற்றும் மண்மங்கலம் பகுதியில், பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் வைக்கப்படாமல் உள்ளன. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, பேரிகார்டுகள் வைக்க, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X