வெங்ககல்பட்டி பிரிவில் ரவுண்டானா, விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை| Dinamalar

வெங்ககல்பட்டி பிரிவில் ரவுண்டானா, விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
கரூர்: 'கரூர் அருகே வெங்ககல்பட்டி பிரிவு பகுதியில், விபத்துகளை தடுக்க, ரவுண்டானா அமைக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி பிரிவு உள்ளது. இதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் இருந்து, வெங்ககல்பட்டி

கரூர்: 'கரூர் அருகே வெங்ககல்பட்டி பிரிவு பகுதியில், விபத்துகளை தடுக்க, ரவுண்டானா அமைக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி பிரிவு உள்ளது. இதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் இருந்து, வெங்ககல்பட்டி பிரிவு சாலை வழியாக பொதுமக்கள் டூவீலர்களில் சென்று வருகின்றனர். திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், கரூர் நகரப் பகுதிக்கு செல்ல, வெங்ககல்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். ஆனால், ஒரு கிலோ மீட்டர் தூரம் வெள்ளியணை சாலையில் சென்று, இடபுறம் திரும்பி மேம்பாலத்தில் செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால், திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்று வலது புறம் திரும்பி, இணைப்பு சாலை வழியாக கரூர் நகருக்கு செல்கிறது. அப்போது ஏற்படும் விபத்துகளில் பலர் சிக்கி படுகாயம் அடைகின்றனர். இதனால், வெங்ககல்பட்டி பிரிவு சாலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: வெங்ககல்பட்டி பிரிவு சாலை விபத்து மையமாக மாறி வருகிறது. இதற்கு சரியாக திட்டமிடாமல், பாலம் கட்டியதுதான் காரணம். திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லாமல், கீழ் பகுதியில் செல்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், வெங்ககல்பட்டி பிரிவு பகுதிகளில் வாகனங்கள் அதிகவேகமாக சென்று வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததால், வழிப்பறி நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X