பொது செய்தி

இந்தியா

7 மாதங்களுக்கு பின் ஒமர் அப்துல்லா விடுதலை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement

ஸ்ரீநகர்: கடந்த 7 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.



latest tamil news


மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


latest tamil news


கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஒமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது சகோதரி சாரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒமர் அப்துல்லா விடுதலை குறித்து மத்திய அரசும், யூனியன் பிரதேச நிர்வாகமும் தங்கள் முடிவை அடுத்த வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.


latest tamil news


இதனை தொடர்ந்து, ஒமல் அப்துல்லா மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று(மார்ச் 24) விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-202002:19:38 IST Report Abuse
K R Ramakrishnan Ramakrishnan இந்த வைரஸை ஏன் இப்போ வெளியில் விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dindigul,இந்தியா
24-மார்-202022:44:50 IST Report Abuse
Krishna 21 நாள் அவனுக்கு லீவு முடிஞ்சவுடனே அவனை மறுபடியும் உள்ள வச்சுருங்க..:D...புண்ணியமா போகும்...இதெல்லாம் வெளிய வந்து என்ன கிழிக்கப்போகுது.பருத்தி மூட்டை கோடௌன் லேயே இருந்துருக்கலாம் மொமெண்ட்
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202019:00:27 IST Report Abuse
நக்கல் இவர் வெளியில் வந்தவுடன் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லலாம்... ஒண்ணு, வைகோவை சந்திப்பது அல்லது கொரோனா பாதித்த மக்களை சென்று பார்த்து ஆறுதல் சொல்லுவது... இவர் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்....
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
25-மார்-202011:14:06 IST Report Abuse
 Muruga Velமெகபூபா முப்தியை சந்திக்கணும்னு சொல்வீங்களோன்னு நெனச்சேன் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X