கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஆற்றல் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
CoronaOutbreak, India, WHO, Eradicating, Pandemics, CoronaVirus, கொரோனா வைரஸ், இந்தியா, ஆற்றல், சின்னம்மை, போலியா, ஒழித்தல், உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா போன்ற தொற்று வைரஸை எதிர்கொள்ள இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் தெரிவித்துள்ளார்.

'கொரோனா வைரஸ்' தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்த வைரஸ் எதிர்வரும் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாக இருக்கிறது.


latest tamil news


ஆனால், உலகளாவிய தொற்றுகளான சின்னம்மை மற்றும் போலியோவை இந்தியா ஒழித்தது போல, கொரோனாவை எதிர்கொள்வது பற்றியும் உலகிற்கு வழிநடத்த வேண்டும். தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு எதிர்கொண்டதை போல உலகிற்கே வழிகாட்டியாக இருப்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-மார்-202000:49:32 IST Report Abuse
Vena Suna நிறைய பேருகள் வெளியே சுத்தறானுங்க...பொறுப்பே இல்லாமல்...பயம் இல்லை...இதனால ஆபத்து வராம இருக்கனும்... WHO க்கு தெரியாது
Rate this:
Share this comment
Cancel
Sundar -  ( Posted via: Dinamalar Android App )
24-மார்-202023:34:15 IST Report Abuse
Sundar இதுக்கு குருட்டுத்தனமான தைரியம் வேண்டும், அது நம்ம கிட்ட நிறையவே இருக்கு,
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
24-மார்-202017:51:43 IST Report Abuse
vasan இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடீங்களேடா.....இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது......மனசாதிச்சியை தொட்டு சொல்லு இப்போ இருக்குற மக்கள் அடர்த்திக்கு தாங்க முடியுமா...நீ சொன்ன நிகளை ஒழிக்க எத்தனையோ வருஷம் ஆச்சி...ஆனா கொரோனா அதுக்கு எல்லாம் டைம் கொடுக்காதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X