பொது செய்தி

தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்டமாக்கப்படும்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: நாகை மாவட்டதை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு, புது மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மயிலாடுதுறை தனி மாவட்டமாக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
மயிலாடுதுறை புது மாவட்டமாக அறிவிக்கப்படுவதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
24-மார்-202016:09:31 IST Report Abuse
E Mariappan நாடு தற்போது இருக்கும் நிலையில் இது போன்ற அறிவிப்புகள் வெளியிட சட்டசபை கூடுவது தேவை இல்லை. இந்த அறிவிப்பை ஆறு மாதம் கழித்து வெளியிட்டால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது. ஆட்சியாளர்கள் நேரமறிந்து நடந்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-மார்-202015:59:08 IST Report Abuse
Vijay D Ratnam தமிழ்நாட்டில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியையும் ஒரு மாவட்டமாக அறிவிக்கலாம். பொதுவாக ஒரு எம்பி தொகுதிக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்கும். கன்னாபின்னாவென்று மாவட்டம் பிரித்து குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாகப்பட்டினம் ஒரு மாவட்ட தலைநகர் ஓகே. அங்கிருந்து வெறும் 20 கிமீ தூரம் இருக்கும் திருவாரூர் ஒரு மாவட்ட தலைநகர். ஆனால் திருவாரூர் இருப்பது நாகப்பட்டினம் எம்பி தொகுதியில். கருணாநிதி அவர் வளர்ந்த ஊரை மாவட்ட தலைநகர் ஆக்குவதற்கு செய்த அக்கப்போர். இத்தனைக்கும் அவரு பொறந்த திருக்குவளை இருப்பது நாகை மாவட்டத்தில். இதுல திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய ஊர் மன்னார்குடி, ஆனால் அது தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. இப்படி ஏகப்பட்ட குழப்பம் இருக்கிறது. மன்னார்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. பிறகு அது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்தது. இப்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. எதிர்காலத்தில் மாவட்ட தலைநகர் ஆகலாம்.
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
24-மார்-202013:24:46 IST Report Abuse
mupaco அருப்புக்கோட்டையை,(விளாத்திகுளம், பார்திபனூர், காரியாபட்டி, திருச்சுழி) கோவில்பட்டியை, ( திருவேங்கடம், சங்கரன்கோவில், கயத்தாறு,கழுகுமலை, சாத்தூர்) விருதுநகரை, (சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்ராப் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டங்கள் உருவாக்கினால் மதுரை தாண்டி சுமார் ஒருமணி நேர தூரத்தில் மாவட்டங்கள் அமையும். விருதுநகரில் 10 தாலுகாக்கள் அதிகம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X