பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் வேண்டுகோள்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
CoronaVirus, TamilnaduCM, Palanisamy, Lockdown, EPS, கொரோனா, வைரஸ், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி, ஒத்துழைப்பு, தேவை

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களின் ஒத்துழைப்பு தேவை என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் எனவும், மாநிலம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பழனிசாமி பேசியதாவது: கொரோனா விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். மாலை 6 மணியுடன் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதால், அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.


latest tamil news


கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும். அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை இந்த அரசு மனதார பாராட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மின்னல் வேகம்


முன்னதாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது மிகப்பெரிய சவாலான நடவடிக்கையாக உள்ளது. எனினும், தமிழக அரசு பொது மக்களை கவனித்து வருகிறது. மக்கள் செய்ய வேண்டியது வீட்டில் இருக்க வேண்டியது தான். வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ள 12,519 பேர் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். தனிமையில் இருப்பவர்கள் வெளியே சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளியின் உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அவருக்கு ஏற்கனவே பல்வேறு நோய்கள் இருந்ததால், ஆபத்தான நிலையில் உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டில் இருப்பதை விடுமுறையாக கருதி சுற்றுலா செல்லக்கூடாது. உலகத்தின் பதற்றத்தை தமிழக அரசு உணர்ந்ததால், தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வல்லரசான அமெரிக்காவையே கொரோனா அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். மக்கள் உயிரை காப்பதே அரசின் நோக்கம். கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தனி மருத்துவமனை


முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரசுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தனி வார்டு அமைய உள்ளது. 350 படுக்கைகளுடன் கொரோனா தனிவார்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARASIMHAN - CHENNAI,இந்தியா
24-மார்-202020:42:32 IST Report Abuse
NARASIMHAN Dear CM, You clapped in appreciation of essential services as per PM's request on Sunday. Nice. But when we saw in TV you are surrounded by 50 men so close, defeating the purpose of social distance, important for arresting Corona virus spread. Is there any logic in that. When you are giving speech in press Meet please ensure your also following what you advise public.
Rate this:
Share this comment
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
24-மார்-202018:43:54 IST Report Abuse
R.Kumaresan ஏதோ எல்லா ஊர்களிலும் சிறந்த மருத்துவவசதி இருக்குர மாதிரி, இது வளரும் நாடுதான் கிராமங்களிலும் கிராமங்களை ஒட்டிய நகரங்களிலும் சிறந்த மறுத்துவ வசதியே இருக்காது, 144 தடை உத்தரவெல்லாம் தமிழ்நாடு போட்டாலும் எந்தளவுக்கு பயன்தரும் என்று யாருக்கும் தெரியாது, நோய் கிருமிகள் வைரஸ் பரவுவதில்லாமல் இருந்தால்தான் பலன் தரும்.. R.Kumaresan.
Rate this:
Share this comment
அருணாசலம், சென்னைநீங்களே கூறுவது தரமான மருத்துவ வசதி இல்லை. நீங்கள் இருப்பது தேனிக்கு அருகில். இக்கட்டான இந்த நேரத்தில் என்ன எதிர்பார்ப்பு....
Rate this:
Share this comment
24-மார்-202021:15:28 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் :: திராவிடன்ஏண்டா இப்படி எதிர்மறையாகவே கருத்து போடுறீங்க .....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
25-மார்-202015:44:03 IST Report Abuse
dandyகட்டுமர ஆட்சியில் அந்த அளவு முன்னேற்றம் சுகாதாரம் ..மருத்துவ வசதிகள் ......
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202018:40:52 IST Report Abuse
Kannan Seenivasagan EPS க்கு Oru Royal salute
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X