அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றம் சொல்லாமல் வேண்டுகோள் விடுங்கள்: ஸ்டாலினுக்கு யோசனை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (175)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில், குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.latest tamil news
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடவும் உத்தரவிட்டார். இதனால், வெளியூரில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால், பஸ்கள் நிரம்பி வழிந்தது.


latest tamil newsஇதனை குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு: கொரோனா வைரஸ் அச்சம், அரசு அறிவித்துள்ள 144 தடை ஆகியவை இருக்கும், இச்சூழலில் வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை சாலையில் நிறுத்தி சண்டையிட வைத்திருக்கிறது அரசு. பேருந்துகளை குறைத்துவிட்டால் மக்கள் எப்படி தங்கள் ஊருக்கு செல்வார்கள் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூடவா அரசுக்கு இல்லை? உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டணம் இல்லாமல் இலவசமாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்!. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். ஸ்டாலினின் இந்த பதிவிற்கு, கடும் விமர்சனம் எழுந்துள்ளது.


latest tamil news


தமிழக அரசு எதை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து, அதையே சுட்டிக்காட்டி பதவி விலக வேண்டும் என தொடர்ந்து கூறி வரும் ஸ்டாலின், கொரோனா நடவடிக்கையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் குற்றம் சாட்டி வருவதாக விமர்சித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஸ்டாலின், தொடர்ந்து தமிழக அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என மக்களை வேண்டுகோள் விடுக்க வேண்டும். கட்சிக்காரர்களை அரசுக்கு உதவ சொல்லுங்கள், 3 முதல் 6 அடி இடைவெளியில் மக்களை கடைகளில் நிற்க சொல்லுங்கள். மக்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லுங்கள். இதிலும் அரசியல் செய்யாதீர்கள், என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
30-மார்-202003:01:19 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஆழ்ந்து சிந்தித்து கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வார்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதை விடுத்து 'சிரிப்புதான்' உடல்நலத்தினை பேணிவதற்கான மாமருந்து என அதனை 'உள்ளடக்கியதுபோல் சமூக விலகல் தேவை என்பதற்கான எதிர் கருத்தினை தெரிவிப்பது எந்தவகையினை சார்ந்தது? வெளி மாவட்டத்தினரையும், மாநிலத்தினரையும் 'இருக்கும் இடத்திலேயே' பேணிக்காத்திடவேண்டும் என அறிவுறுத்துவது விவேகமல்லவா? அதனை விடுத்து 'புளிமூட்டைகள்போல்' அடைத்து அவரவர் ஊர்களுக்கு அவர்களை அனுப்ப மேலும் ஊர்திகளை அதிகரிக்க வேண்டுவது ஆழ்ந்து சிந்திக்கும் தலைவர்கள் கொரோனாவினால் ஆட்கொள்ளப்பட்டினரோ என எண்ணினால் சரியா, தவறா?
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
29-மார்-202021:04:53 IST Report Abuse
Dr.C.S.Rangarajan அடுத்த பத்து நாட்களுக்கு தேவையான கட்சி தலைவர்களின் 'தினசரி' அறிவிப்புகளை 'குழுக்கள் அமைத்து' முன்னரே தயாரித்துக்கொண்டிருப்பார்களோ தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் என எண்ண தோன்றினால் அது சரியா, தவறா? கோள்கள் நகர்ந்து இடமாற்றங்கள் ஆவதில் நேரங்கள் கூடி குறையலாமோ என்னவோ, தலைவர்கள் 'விடிய விடிய' வழங்கும் தினசரி அறிவிப்புகள் துப்பாக்கியில் இருந்து விடுபட்ட 'குண்டு' போல் வருவதில் 'தாமதம்' இல்லாதிருப்பது எதனால்?
Rate this:
Cancel
jayaraman - kumbakonam,இந்தியா
25-மார்-202011:39:00 IST Report Abuse
jayaraman சமூக ஆர்வலர் ஸ்டாலினுக்கு சொன்னது சரி என்று சொல்பவர்கள் சட்டசபையில் கடைசி நாளில் எதிர் கட்சிகள் புறக்கணித்த நேரத்தில் மான்யகோரிக்கை சம்பந்தமாக பேசும்போது தி .மு.க.வை காழ்ப்புணர்ச்சியுடன் பேசியது ஏன்? சட்டசபையில் இருப்பதுக்கு பதில் பயணிகள் ஊர் செல்ல ஏன் ஏற்பாடு செய்யவில்லை.நாடே பாதித்து உள்ள நிலையில் மாவட்ட பிரிப்பு அவசியமா .பரிசு பொருள் கொடுத்து கொண்டாடுவது அவசியமா. இது சமூகஆர்வலருக்கு தெரியாதா?
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
26-மார்-202011:39:53 IST Report Abuse
இரா. பாலாபயணிகள் எங்கும் செல்லக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கு போடப்பட்டது. உண்மையில் உடனடியாக அனைத்துப் போக்குவரத்தினையும் அரசு நிறுத்தியிருக்க வேண்டும். தமிழர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் அலறியடித்துக் கொண்டு ஊருக்கு வந்தனர். இதனால் ஏற்பட்ட நோயின் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரியவரும். தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அடுத்த 21 நாட்களுக்கும் தங்கியிருப்பதில் என்ன பிரச்சனை. சென்னையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் வசிப்பவர்களும் மனிதர்கள்தானே. தமிழர்களுக்கு ஆபத்துக் காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பதில்லை. அனைவரும் நிபுணர்கள் போல ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டு அலைகிறோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X