பொது செய்தி

இந்தியா

வீட்டை விட்டு வெளியே வந்தால் சிறை: புதுச்சேரி முதல்வர்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Puducherry, Narayanasamy, CoronaVirus, CM, புதுச்சேரி, முதல்வர், சிறைதண்டனை, நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாராயணசாமி தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.


latest tamil news


கூட்டத்தின் முடிவில் அவர் பேசியதாவது: புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். மக்களுக்கு உயிர் பற்றிய கவலையில்லை. இதனை தடுக்க தேவைப்பட்டால் துணை ராணுவத்தினரின் உதவி கோரப்படும். அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். நாளை (மார்ச் 25) முதல் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். நாளை முதல் யாரும் வெளியே வரவேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
25-மார்-202010:28:30 IST Report Abuse
Sankare Eswar உன்னை மாதிரி மூளை கேட்ட முதலமைச்சர் எல்லாம் அறிவுரை சொல்லற நிலைமை வந்துட்டு. அம்மா கிரண்பேடி அவர்களே ஒரு நாலு கொரோனாவை புடிச்சு அவர் வாயில விடுங்களேன் . அப்பாவது எந்த நாரா வாயி மூடுதான்னு பார்ப்போம். ஒரு வாரத்துக்கு வசதி உள்ளவன் பொருட்களை வாங்கி வச்சுப்பான். பாவம் ஏழை பாழைங்க என்ன பண்ணுவாங்க? எந்த நாட்டிலயும் சரி இந்தியாவில் எந்த மாநிலத்திலயும் சரி இந்த மாதிரி கூமுட்டை சட்டம் எவனும் போடல. அத்தியாவசிய பொருட்கள், மருந்து, சாப்பாடு இவைகளை சமூக இடைவெளி விட்டு வாங்கி கொள்ளலாம்னுதான் சொல்லியிருக்காங்க. இந்த பைத்தியத்துக்கு கொரோனாவே எவ்வளவோ தேவலாம்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
25-மார்-202010:58:54 IST Report Abuse
S Ramkumarஇடைவெளி என்று சொன்னால் எல்லாரும் ஒரே இடத்தில குழுமி கும்மி அடிக்கிறார்கள்....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
25-மார்-202010:24:06 IST Report Abuse
ramesh இந்தியா முதலமைச்சர்கள் அணைவருக்கும் நாராயணசாமி அவர்கள் கொரன பாதுகாப்பு நடவடிக்கையில் முன் உதாரணமாக திகழ்கிறார்.இதையே அணைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் .பாராட்டுதல்கள் .இந்த விஷயத்தில் அரசியல் கருத்து தேவை இல்லை . மக்கள் நலனே முக்கியம் .
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
25-மார்-202012:52:12 IST Report Abuse
s.rajagopalanகவர்னர் பேடி வெளியே வராரா என்று பார்க்காதீர்கள்,,,,, அவருக்கும் வெளியே வேலை இருக்குதுங்கோ...
Rate this:
Cancel
Subramanian - Chennai,இந்தியா
25-மார்-202009:53:39 IST Report Abuse
Subramanian மருந்து கடைகளை திறந்து என்ன பிரயோஜனம்? மக்கள் வெளியே வராமல் எப்படி மருந்து வாங்குவார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X