பொது செய்தி

இந்தியா

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள்: மத்திய அரசு உத்தரவு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், அச்சுறுத்தல், மத்தியஅரசு, மருத்துவவசதிகள், மாநில அரசு, மருத்துவமனைகள்,

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள, மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை:
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள, மருத்துவமனைகளில் கூடுதலாக பரிசோதனை கூடங்கள், தனிமைபடுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதியை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.
வென்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுதலாக படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-202019:41:00 IST Report Abuse
Bhaskaran கிறிஸ்தோபர் டயல் என்னும் வெளிநாட்டு எழுத்தாளர் எழுதியுள்ள மஹாபாரத தேடல் என்னும் நாவலின் முதல்பாகமான அலெக்சாண்டர் ரகசியம் என்னும் நூலில் அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் இம்மாதிரி வைரஸை பரப்பி மக்களை மரணமடையச்செய்யும் திட்டம் வைத்துள்ளது என்பதை 89, 90பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார் தினமலர் வாசகர்கள் படிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
24-மார்-202019:07:40 IST Report Abuse
 Sri,India சிகரெட் ,மது இரண்டையும் நிரந்தரமாக தடை செய்து மக்களை வாழ விடுங்கள் . இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படும் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துங்கள் . வரி வருவாய்க்காக மக்களை சாக வைக்காதீர்கள் . இனிமேலாவது மத்திய மாநில அரசுகள் சிந்திக்குமா ??
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
24-மார்-202018:35:42 IST Report Abuse
svs மத்திய அரசாங்க ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ள சித்த ஆயுர்வேத மருந்துகளையும் வழங்க வேண்டும் ...சித்த மருந்துகள் நோய் வராமல் தடுக்கும் என்று அறிவிக்கவில்லை .....நோய் வந்தால் இந்த மருந்துகள் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும் ...செலவில்லாத வைத்தியம் கூட ....உடனே இதை அமல் படுத்த வேண்டும் ....ஆயிரக்கணக்கானோர் பாதிக்க பட்டால் இங்கு பரிசோதனை வசதியோ , டாக்டர்களும் கிடையாது ...மருத்துவர்களும் எத்தனை பேர் துணிந்து வருவார்கள் ....இத்தாலி போல் இங்கு கிடையாது ...நோய் தொற்றல் அதிகம் . பாதுகாப்பு வசதிகள் குறைவு ...அல்லோபதி மருத்துவம் பார்க்கட்டும் ...வசதியில்லாத எளியோர்க்கு உதவும் வகையில் ஆயுர்வேத சித்த மருந்துகள் உடன் வழங்க வேண்டும்...
Rate this:
Share this comment
அருணாசலம், சென்னைஎங்கே பார்த்தாலும் இதே போல இத்தாலியை உதாரணமாக காட்டி கருத்து பதிவு. அங்கு நடந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை. அதை குலைத்து கருத்து பதிவு வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X