பொது செய்தி

தமிழ்நாடு

44 தடை எதிரொலி சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக அனுமதி

Added : மார் 24, 2020
Share
Advertisement


பெரம்பலுார்: திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளிலும், இலவசமாக அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் எனவும், மாநிலம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பணியாற்றிய அரசு மற்றும் தனியார் அலுவர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ் கார் மற்றும் டூவீலர்களின் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்..

இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம் திருமாந்துறை, கடலுார் மாவட்டம் செங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும், கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால், ம. அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X