உங்களுக்காக உங்கள் குடும்பத்தினருக்காக...

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisementlatest tamil news


கொரானா இன்றைய நிலவரம் இன்னும் மோசமாகி இருக்கிறது.வட மாநிலங்களில் காய்கறிகள் வாங்குவது முதல் சிலிண்டர் பெறுவது வரை ஒரு பதட்டத்தில்தான் நடக்கிறது எங்கே நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் கூட்டமாய் கூடிவிடுகின்றனர்.


latest tamil news


கொரானாவில் இருந்து தப்பிக்க ‛தனித்திரு' என்கின்ற மிக முக்கியமான விஷயத்தை இதில் மறந்துவிடுகின்றனர்.தமிழகமும் இந்த தப்பை செய்துகொண்டுதான் இருக்கிறது.


latest tamil news


Advertisement

பஸ்களை அதிகப்படுத்தி கூட்டமில்லாமல் மக்களை அனுப்புவதை விட்டுவிட்டு பஸ்களை குறைத்து மக்களை கூட்டம் கூட்டமாக கூடவிட்டு, அடித்துபிடித்து பஸ்களில் அடைத்தபடி போகவிட்டுள்ளனர்.


latest tamil news


அடுத்து ஆயிரம் ரூபாய் வாங்கவும் அடுத்த மாத பொருளை ரேசனில் சேர்த்து வாங்கவும் விடிகாலையிலேயே மக்கள் கூட ஆரம்பித்துவிடுவர்.


latest tamil news


நம்ம ஊர் பயலுக யாரும் பாதிக்கப்படலை எல்லாம் வெளிநாடு போய்ட்டு வந்த ஆளுகதான் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்கின்ற அலட்சிய உணர்வு இப்போதும் கூட இருக்கிறது.


latest tamil news


பக்கத்து வீட்டுக்காரன்,எதிர்வீட்டுக்காரன்,ஆபிசில் தெரிந்தவன் என்று யாராவது பாதிக்கப்படும் போதுதான் இதன் விவகாரமும் வீரியமும் புரிந்து அடங்குவர்.


latest tamil news


நீண்ட நாள் வாழாவிட்டாலும் வாழும் வரையிலாவது ஆரோக்கியத்தை கடைபிடியுங்கள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காக உங்கள் குடும்பத்தினருக்காக
எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkadesh Lakshmanan - Tenkasi,இந்தியா
24-மார்-202019:30:59 IST Report Abuse
Venkadesh Lakshmanan உங்கள் கருத்தை ஏற்கிறேன் நண்பா தான் வீட்டில் வரும் வரை அதன் விளைவு புரியாமல் மக்கள் இருக்கின்றனர். ஆட்சியில் உள்ளவர்கள் மட்டும் விழிப்புணர்வு கொண்டு வர முடியாது. வைரஸ் குறித்து அறிந்தவர்கள் புரியும் படியாக அவர்களுடைய உறவினர்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வந்தாலே போதும். இந்த வைரஸ் காற்றின் மூலமோ கொசுவின் மூலமோ பரவாது மாறாக மக்களின் எச்சில் மூலமாக (தும்பும் போது), கை மூலமாக (80 %) பரவுகிறது. தாமாக அதன் பின் விளைவுகளை அறிந்து தனிமையை உறுதிசெய்து இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்கலாம். பொதுவாக பெரியவர்களுக்கும் (60 வயதிற்கு மேல் உள்ளவர்கள்), குழந்தைகளுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் அதிகமாய் பாதிக்க பட்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X