பொது செய்தி

இந்தியா

வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (199)
Share
Advertisement

புதுடில்லி; கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக போராடி வருகிறது.latest tamil newsசங்கிலி தொடர் முறையில் பரவும் இந்த தொற்றை ஒழிக்க நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் அனைவரும் விலகியே இருக்க வேண்டும். இதற்கு நான் கூட விலக்கு அல்ல. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது. யாரும் கொரோனாவை ஒரு விளையாட்டாக நினைக்காதீர்கள். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களும் முடக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாம் கொரோனாவை வெல்ல முடியும். இவ்வாறு மோடி பேசினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (199)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
25-மார்-202015:46:09 IST Report Abuse
N Srinivasan if the curfew d like demonetization of currencies in 2016, how the common man staying in lodges hostel will have daily food?the hotels and other places are not opened.buying snacks also difficult.the disabled how they will manage? will the Govt.provide any free food to all.this will not solve the problems.online food supply also stopped.in this situation how we go to manage for coming days.
Rate this:
Cancel
25-மார்-202015:35:37 IST Report Abuse
Venkatasubramanian தங்கள் கருத்தை ஏற்று ஒத்துழைப்பு வழங்குவோம்
Rate this:
Cancel
25-மார்-202015:25:54 IST Report Abuse
சஹானா   MBBS   சென்னை கொரோனா பறவைகளையோ நாய் பூனைகளையோ ஒன்றும் செய்வதில்லை அவைகள் சுதந்திரமாக பறக்கின்றன வாழ்கின்றன இந்த மனிதர்களைதான் கோரோனோவுக்கு பிடிக்கவில்லை நான் அடுத்த ஜென்மத்தில் பறவையாக பிறக்கவே ஆசை படுகிறேன் எங்கள் வீட்டு செல்லம் பொம்மெரியன் பப்பி காக இந்த பதிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X