பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல்1 ஆம் தேதி காலை 6 மணி வரையில் நடைமுறையில் இருக்கும்.



latest tamil news




முக்கிய விதிமுறைகள்


பெட்ரோல் நிலையங்கள் செயல்படும், ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்படும்.
அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
எந்த ஒரு இடத்திலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது
அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் எதுவும் இயங்காது
டீ கடை உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.
அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மார்ச் 31-ந் தேதி வரை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்கும்.
மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை.
பால், கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லலாம்
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை தவிர்த்த பிற வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் நலன்கருதி இந்த உத்தரவு அனைவரும் பின்பற்றி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவை மீறுவோருக்கு இந்திய சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாவார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunachalam Saptharishi - Chennai,இந்தியா
25-மார்-202013:41:47 IST Report Abuse
Arunachalam Saptharishi சென்னைக்கு 144 ஆ அல்லது curfew ஆ? ஒரு சானலில் 144 என்றும் மற்றதில் கர்ப்பியூ என்றும் கூறி குழுப்பி விடுகின்றனர் .
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-மார்-202004:38:44 IST Report Abuse
ocean kadappa india நடு இரவுகளில் உலகின் பல திசைகளில் இருந்து பல திசை நோக்கி அதி உயரத்தில் வானில் வேகமாக பறந்து செல்லும் அதி கனமான பெரிய பறவை இனங்களில் வவ்வாலும் ஒன்று. பறந்து செல்லும் வழியில் அடர்ந்த காடுகளில் தங்கி தனது இனத்தை கூடுகளிலும் மர பொந்துகளில் விட்டு செல்லும். அவைகளில் வவ்வால் ஆந்தை கோட்டான் போன்றவை அடங்கும். அவைகள் மாமரங்கள் ஆலமரங்கள் அரசமரங்கள் புளிய மரங்களில் உள்ள மர பொந்துகளில் அதிகம் வசிக்கும். அருகில் உள்ள கிராம வீடுகளில் போட்டு வைத்துள்ள தட்டு முட்டு சாமான் அடப்ப அறைகள் மாமர பொந்துகளில் வவ்வால்கள் வந்து குடியேறும். காட்டு பகுதிகளில் வசிக்கும் சீனாக்காரன்கள் துரித உணவில் நாட்டமுள்ளவர்கள். அவர்கள் வசிக்கும் கொட்டாய் குடிசை பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நாய் பூனை பன்றி பாம்பு ஆந்தை வவ்வால்களை கொன்று பசி வந்து பத்தும் பறக்க அரை வேக்காட்டில் சமைத்து தின்பவர்கள். அவர்களிடம் கொரோனா தோன்றிய உவான் என்ற ஊர் சிறு கிராம பகுதியாக இருக்கலாம். அதை மாகாணம் என்றழைக்கிறார்கள். இவர்கள் மனித குலத்திற்கே ஒரு சாபக் கேடானவர்கள். மாகாணம் என்றால் ஒரு பெரிய வட்டம். அதை ஊர் என எப்படி சொல்ல முடியும். நாம் ஒருவரை ஒருவர் தொடுகிறோமோ இல்லையோ நமது வீடுகளில் உள்ள அடப்பங்களில் வவ்வால்கள் குடி இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். இந்த ஊரடங்கு நேரத்தில் அதனை செய்யலாமே. இது போன்ற சின்ன விஷயங்களை கவனியாது விட்டால் பின்னால் விஸ்வரூப பிரச்சனையாகும். முதலில் பாக்ட்டீரியா இப்போது வைரஸ் இதன் பிறகு என்ன வருமோ தெரியாது. அன்றைய மலேரியா எராடிகேஷன் புரோகிராம் போல் மாநில மைய அரசுகள் இப்போது வவ்வால் எராடிகேஷன் புரோகிராமை அமைத்து நாட்டிலுலள்ள வவ்வால்களை அழிக்க முன் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Hari - chennai,இந்தியா
25-மார்-202010:11:57 IST Report Abuse
Hariஉங்கள் கருத்தை சுடலைக்கு சொல்லுங்கள்.நன்றி...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
24-மார்-202021:11:47 IST Report Abuse
தாண்டவக்கோன் @ தமிழர்நீதி: அடி மடீலவே கைய வெச்சிட்டீங்களே, அதுங்களுக்கு மேட மைக்செட்டு இதுல்லாம் இல்லாமெ ஒன்னும் ஓடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X