ஒலிம்பிக் போட்டி: ஓராண்டு ஒத்திவைப்பு:ஜப்பான் அரசு அறிவிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

டோக்கியோ:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டது.



latest tamil news



ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ஆக. 9ல் ஒலிம்பிக் போட்டி நடக்க இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், அனைத்து தகுதிச் சுற்றுகளும் ரத்தாகின. வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்பட்டது. இதனிடையே பல்வேறு தரப்பில் இருந்து வந்த நெருக்கடிகளை அடுத்து, ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விவாதித்தார். தவிர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொலைபேசி வாயிலாக ஷின்சோ அபேயிடம் பேச இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக்கை ஒரு ஆண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
25-மார்-202014:17:44 IST Report Abuse
K.Sugavanam இரண்டாம் உலகப்போர் போது ரத்து வைத்த மாதிரி இந்த 2020 ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்துவிட்டு 2024 ஆம் ஆண்டு நடத்துங்கள்.ஒன்றும் கெட்டு விடாது..
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-மார்-202010:34:03 IST Report Abuse
 Muruga Vel வடகொரியாவின் அதிபரை பாராட்டவேண்டும் ..வைரஸ் பற்றி எந்த தகவலும் இல்லை … ஆபிகானிஸ்தானிலும் சிரியாவிலும் லிபியாவிலும் வைரஸ் பற்றி தகவல் ஒன்னும் இல்லை ..
Rate this:
Cancel
Sundar - Hartford,யூ.எஸ்.ஏ
24-மார்-202022:21:32 IST Report Abuse
Sundar டோக்கியோ ஒலிம்பிக் லோகோவுக்கும் கொரோனா வைரசுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X