கிருமிநாசினிகள், சுவாசக்கருவிகள் ஏற்றுமதிக்கு தடை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா பாதிப்பு எதிரொலியாக கிருமிநாசினிகள், சுவாசிக்க தேவைப்படும் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள், சந்தித்த நபர்களையும் அடையாளம் கண்டு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



latest tamil news




அரசின் விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக கிருமிநாசினிகள், மாஸ்க், சோப்பு பயன்பாடு நாட்டில் அதிகரித்து வருகிறது. மும்பையில் தரமற்ற கிருமிநாசினிகள் தயாரித்து, முறையான அனுமதியின்றி ஏற்றுமதி செய்த நிறுவனத்தை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் கிருமிநாசினிகள், சுவாச கோளாறு சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகள், செயற்கை சுவாசத்திற்கு தேவைப்படும் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X