பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க போலீசாருக்கு பிரத்யேக கவச உடை

Added : மார் 24, 2020
Share
Advertisement
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க போலீசாருக்கு பிரத்யேக கவச உடை

சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படும் நபர்களை, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்காக, போலீசாருக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து, பொது
மக்கள் தங்களை தற்காத்து கொள்வது பற்றி, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, டி.ஜி.பி., திரிபாதியும், பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என, சந்தேகப்படும் நபர்கள் குறித்து, தகவல் கிடைத்தால், அவர்களை, சுகாதாரத் துறையினருடன் இணைந்து, மருத்துவ
மனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மாநகர காவல் துறையில், 39 உதவி கமிஷனர்களின் கீழ் பணிபுரியும், 117 போலீசாருக்கு, பிரத்யேக கவச உடை
வழங்கப்பட்டுள்ளது.அடுத்து, 135 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கும், இந்த கவச உடைவழங்கப்பட உள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி
கள் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வந்தோர்தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அவர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது.மேலும், நுண்ணறிவுபோலீசார் வாயிலாக, கடும் காய்ச்சல்
இருப்போர் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவராக சந்தேகப்படும் நபர்கள் குறித்து, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.அது போன்ற நபர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அப்பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள போலீசாருக்கு, பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X