பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி உதவி

Added : மார் 24, 2020
Share
Advertisement
 சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி உதவி

சென்னை : 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதித்த திரையுலகினருக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 19ம் தேதி முதல், அனைத்து வகையான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனால், படப்பிடிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உதவுமாறு, 'பெப்சி' என்ற, திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர், செல்வமணி, நடிகர் - நடிகையருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். நடிகர்
சங்கம் சார்பிலும், அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர், வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.அன்றாட அத்தியாவசியதேவையை பூர்த்தி செய்ய, சங்கத்தைச் சேர்ந்த மனிதநேய பண்பாளர்கள், நிதியுதவி தர வேண்டுகிறோம்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, நடிகர்சங்க வங்கி கணக்கு
விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், பெப்சி சங்கத்திற்கு, நடிகர் ரஜினி, 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சிவகுமார், விஜய்
சேதுபதி, சிவகார்த்திகேயன் சார்பில், தலா, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி தரப்பட்டது. தயாரிப்பாளர் தாணு, தலா, 25 கிலோ அடங்கிய, 250 அரிசி மூட்டைகள்; பிரகாஷ்ராஜ், 150 அரிசி மூட்டைகளை வழங்கினர். தமிழ் திரைப்பட தினசரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில், 100 கிலோ அரிசி, நேற்று வழங்கப்பட்டது.
நடிகர் பார்த்திபன் வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியுள்ளதாவது: கிருமி யுத்தத்தில், மக்களை காக்க போராடி வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர், அமைச்சர்கள், சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், காவல் துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மக்கள் அனைவரும், 144 தடை உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். முக்கியமாக, தற்காலிகஅவசர கால மருத்துவமனைகளை, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு அலுவலகங்கள், காலியாக உள்ள குடியிருப்புகளில்
ஏற்படுத்தினால், மக்களுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X