பொது செய்தி

தமிழ்நாடு

மின் சப்ளை துண்டிப்பை நிறுத்தியது வாரியம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், மின் வினியோகம் துண்டிக்கும் பணியை, வரும், 31ம் தேதி வரை, மின் வாரியம் நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டும் மேற்கொள்கிறது. வீடுகள், கடைகள் போன்ற தாழ்வழுத்த மின் இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இல்லையேல், மின் ஊழியர்கள், கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டிப்பர். பின், அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தியதும், மீண்டும், மின் வினியோகம் வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால், மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபடவில்லை. இதனால், முந்தைய மாத மின் கட்டணத்தையே, இம்மாதமும் செலுத்தலாம் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக, தொழில்கள் முடங்கி உள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வரும், 31ம் தேதி வரை,
மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், மின்
வினியோகத்தை துண்டிக்கக் கூடாது என, பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X