பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு ரூ.3,600 கோடி

Added : மார் 24, 2020
Share
Advertisement


விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்ததற்காக, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 3,676 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, இந்திய உணவு கழகம் சார்பில், நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த நெல், அரவை ஆலைகளில், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், அக்டோபர் முதல் செப்டம்பர் வரை, நெல் கொள்முதல் சீசன். நடப்பு கொள்முதல் சீசன், 2019 அக்., 1ல் துவங்கியது.
நெல் கொள்முதல் செய்வதற்காக, மத்திய, மாநில அரசுகள் சார்பில், விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.அதன்படி, நடப்பு சீசனில், நேற்று வரை, 1,950 நேரடி நிலையங்கள் வாயிலாக, 3.57 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 19.44 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களின் வங்கி கணக்குகளில், 3,676 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ---- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X