பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவ துவங்குகிறது, 'கொரோனா' தனித்திருங்கள்; தடுக்கலாம் நோயை

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 தமிழகத்தில், பரவ, துவங்குகிறது, கொரோனா, தனித்திருங்கள், தடுக்கலாம், நோயை

சென்னை : தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் மின்னல் வேகத்தில் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தனித்திருக்கும்படி, சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழக அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் பணி நிமித்தமாக இருந்தோர், சொந்த ஊர்களுக்கு, நேற்று முன்தினம் மாலை முதல் புறப்பட துவங்கினர்.


வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அச்சம்ரயில் சேவை ரத்து, குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம் போன்றவற்றால், மக்கள் கூட்டம் அதிகமானது.மேலும், மக்களிடையே எழுந்த பீதி காரணமாக, தமிழகம் முழுவதும், காய்கறி, மளிகை, 'டாஸ்மாக்' கடைகளில், மக்கள் கூட்டம், அதிகளவு காணப்பட்டது. இதனால், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை பலருக்கு பரவியிருக்க கூடும் என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சொந்த ஊர்களுக்கு சென்றோர், நகரங்களில் வசிப்போர் என, அனைவரும் தனித்திருக்கும்படி, சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, ஓரிரு வாரத்திற்கு பின் தான், அடையாளம் காண முடியும்.

எனவே, பொது மக்கள், தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு, அதிக நெருக்கடியில் சென்றோர், குறைந்தது, 14 நாட்களாவது, தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.


ராஜா ராணிசொந்த ஊருக்கு வந்து விட்டோம்; பாதிப்பு இல்லை என, அலட்சியம் காட்டாதீர் .அதேபோல், பொது மக்களும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது. வீட்டில், சிறியவர்கள் இருந்தால், அவர்களுடன், தாயம், ராஜா ராணி உள்ளிட்ட விளை யாட்டுகளை, அவர்களுடன் விளையாடி பொழுதை போக்குங்கள். அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது, முக கவசம் கட்டாயம் அணியுங்கள்; வீடு திரும்பியதும், நன்றாக குளிப்பது அவசியம். பொது மக்களின் பங்களிப்பில் தான், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
25-மார்-202017:21:41 IST Report Abuse
Ambika. K Idhu periyaar bhoomi indha koronavirkellam Bayappadamattom. Idhu uyirkolli ennum mooda nambikkayai olippom
Rate this:
Share this comment
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
25-மார்-202017:14:38 IST Report Abuse
துயில் விரும்பி வன்னியர் காப்பாளர்கள் பெரிய மருத்துவர் சின்ன மருத்துவர் எங்கே? வெளியே வந்து சேவை புரியவும், மக்களுக்கு அடிச்ச காசுல கொஞ்சம் கொடுக்கணும், இல்லாட்டா மக்கள் அவர்கள் வீட்டுக்கு சென்று பிடிங்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
25-மார்-202010:38:45 IST Report Abuse
Srinivas பொதுமக்கள் கவலைப்படவேண்டாம். பெரிய மருத்துவர் இருக்கிறார்....பார்த்துக்கொள்வார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X