பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் பரிசு!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement


சென்னை : 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, முதல்வர், இ.பி.எஸ்., சட்டசபையில் பேசியதாவது:கொரோனா வைரஸ், வேகமாக பரவக்கூடிய நோய்; 187 நாடுகளில் பரவியுள்ளது. மாவட்ட எல்லைகளை மூடுவது மட்டுமல்ல; பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து, தங்களை தனிமைப்படுத்தி, இந்நோயை தடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக டாக்டர்களை சந்தித்து, பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்நோய் வந்தவர்கள், பிறரிடம் பேசுவதோ, தொடர்பு வைத்துக் கொள்ளவோ கூடாது. இது, வேகமாக பரவக்கூடிய நோயாக இருக்கிற காரணத்தால், அனைவரும்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில், அரசு முழு மூச்சுடன் செயல்படுகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்கள், அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், உடனடியாக மருத்துவமனையில்
சேர்ந்து, சிகிச்சை பெற வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வரும் சிலர், காய்ச்சலுக்கான மாத்திரையை சாப்பிட்டு விட்டு வருவதால், பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சிலர், பெங்களூரில் இறங்கி, இங்கு வந்து விடுகின்றனர். பிற விமான நிலையங்களில் இறங்கி, நம் மாநிலத்திற்கு வந்து விடுகின்றனர்; அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவ்வாறு பிற மாநிலங்கள் வழியே வந்தவர்கள், வீட்டிலே இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, தங்களை
பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை, அரசு தனிமைப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு, ஒரு மாத ஊதியம், சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்; அவர்கள்
அனைவரையும் மனமார பாராட்டுகிறோம். அரசு எடுத்து வரும், நடவடிகைக்களுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோலைபட்டி பார்த்திபன் 1 பங்கிற்கு 3 மடங்கு கூட தரலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X