பொது செய்தி

தமிழ்நாடு

'ட்ரோன்' வாயிலாக கிருமி நாசினி சென்னையில் சோதனை முயற்சி

Added : மார் 24, 2020
Share
Advertisement
'ட்ரோன்' வாயிலாக கிருமி நாசினி சென்னையில் சோதனை முயற்சி

சென்னை :'ட்ரோன்' வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் சோதனை முயற்சி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று நடந்தது.தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், ஒன்றாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு விதமான இயந்திரங்கள் கையாளப்படுகின்றன.


கூட்டம் கூடக் கூடாது


'ட்ரோன்' என்ற, ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் சோதனை முயற்சி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று நடந்தது.
இது, ஒரு லிட்டர் கிருமி நாசினியுடன், 100 மீட்டர் உயரத்திற்கு பறந்து, ஒன்று முதல், ஒன்றரை கிலோ மீட்டர் வரை, கிருமி நாசினியை தெளிக்கும் திறன் உடையது. முதற்கட்டமாக, மருத்துவமனைகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சமுதாய இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்ந்து கை கழுவ வேண்டும். வீட்டில், தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க, ஒரே கடையில் கூட்டம் கூடக் கூடாது. மதுரை சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
விபரம்

அவர், வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் சென்று வந்தாரா; இல்லை, இங்கேயே அவருக்கு தொற்று ஏற்பட்டதா; அதாவது, சமுதாய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா, இல்லையா என்ற, விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.கிருமி நாசினியில், 'கிரிசோல், ஹைப்போ குளோரைடு, பிளிச்சிங் பவுடர்' ஆகியவை கலந்து தெளிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X