பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் ரூ.1,000; அரிசி, பருப்பு, மளிகை இலவசம்:அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா?

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரேஷனில், ரூ.1,000; ,அரிசி,  பருப்பு, மளிகை இலவசம்,அத்தியாவசிய ,பொருட்கள், கிடைக்குமா?

சென்னை -அனைத்து மாவட்டங்களிலும், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய் நிவாரணம் உட்பட, 3,280 கோடி ரூபாய் மதிப்பில், சிறப்பு நிவாரண உதவிகளை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* அனைத்து மாவட்டங்களிலும், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம், பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க, அரசு முடிவு செய்து, 3,280 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டு உள்ளேன்

* அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய், நிவாரணம் வழங்கப்படும். அவர்களுக்குரிய ஏப்ரல் மாதத்திற்கான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, இலவசமாக வழங்கப்படும் ரேஷன் கடைகளில், கூட்டத்தை தவிர்க்க, 'டோக்கன்' முறையில், ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வினியோகிக்கப்படும்.

இதை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில், மின்னணு முறையில் அல்லது மொபைல் போன் செயலியில் பதிவு செய்யலாம் ரேஷன் கார்டுதாரர்கள், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்
* கட்டட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு, சிறப்பு தொகுப்பாக, தலா, 1,000 ரூபாய், 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்

* தமிழகத்தில் சிக்கித் தவிக்கும், பிற மாநில கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், இலவசமாக வழங்கப்படும்

* அம்மா உணவகத்தில், சூடான, சுகாதாரமான உணவு, தொடர்ந்து வழங்கப்படும். எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே, சூடான, சுகாதாரமான முறையில், உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கேற்ப, பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

*அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோருக்கு, தேவையான உணவை, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வழங்க, கலெக்டர்கள் நடவடிக்கை எடுப்பர்

*பதிவு செய்யப்பட்ட, நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும், 1,000 ரூபாயுடன், கூடுதலாக, 1,000 ரூபாய், நிவாரணத் தொகையாக வழங்கப்படும்
*தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், இம்மாதம பணி புரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

ரேஷன் கடைகளில் தடையின்றி பொருட்களை வழங்கி ஊழியர்கள் விடுப்பு எடுக்க கூடாது என கூ்ட்டுறவு மறறும் உணவுத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோகை ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரிசி உள்ளி்ட்ட பொருட்க்ள் வழங்கப்படுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Venkataramanan - Chennai,இந்தியா
25-மார்-202013:16:14 IST Report Abuse
R Venkataramanan The rations shops are properly watched. On several the sales man says short supply of Palm Oil for card holders but supplies to others for cash at higher rate.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X