அரசியல் செய்தி

தமிழ்நாடு

கதர் துறை அமைச்சருக்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
சென்னை :கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், நேற்று சட்டசபையில், மானிய கோரிக்கையை முன்மொழிய எழுந்தபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கைதட்டியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சராக உள்ளார். சட்டசபையில், அவர் துறை தொடர்பான கேள்விகளை, பெரும்பாலும் உறுப்பினர்கள் கேட்பதில்லை. எனவே, சபையில் அவர் பேச வாய்ப்பு

சென்னை :கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், நேற்று சட்டசபையில், மானிய கோரிக்கையை முன்மொழிய எழுந்தபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கைதட்டியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சராக உள்ளார். சட்டசபையில், அவர் துறை தொடர்பான கேள்விகளை, பெரும்பாலும் உறுப்பினர்கள் கேட்பதில்லை. எனவே, சபையில் அவர் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை கூட்டத் தொடரில், தன் துறை மானிய கோரிக்கையின் போது மட்டும் பேசுவார். அப்போது, கட்சிபாகுபாடின்றி அனைவரும் கை தட்டுவர்.அதேபோல, நேற்று அவர், தன் துறை மானிய கோரிக்கையை முன்மொழிய எழுந்ததும், அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.

இதனால், சபையில் சிரிப்பலை எழுந்தது.திடீரென எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டியதற்கான காரணம் புரியாமல், முதல்வரும், துணை முதல்வரும், எம்.எல்.ஏ.,க்களை திரும்பி பார்த்து, 'என்ன காரணம்' என கேட்க, 'அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறோம்' எனக்கூற, அவர்களும் சிரித்தனர்.சட்டசபை/

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X