38வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை : சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

38வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை : சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Added : மார் 24, 2020
Share
சென்னை :''நாகப்பட்டினம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்.,அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், துறை வாரியாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:வருவாய் துறை நாகப்பட்டினம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் சென்னையில்,


சென்னை :''நாகப்பட்டினம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்.,அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், துறை வாரியாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:வருவாய் துறை நாகப்பட்டினம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் சென்னையில், பழமை யான எழிலக கட்டடத்தின் பராமரிப்பு செலவு அதிகமாவதால், அதே இடத்தில், 120 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு, உலக தரத்திலான உபகரணங்களை கொள்முதல் செய்ய, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இணையதளம் வழியாக, சொத்து தொடர்பான வில்லங்கங்கள் விபரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும்ஆதிதிராவிடர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான உணவு தொகை, 100 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் ஐந்து தொடக்க பள்ளிகள், நடுநிலைப் பள்ளி களாகவும், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 17 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், 48.74 கோடி ரூபாய் மதிப்பில், நிலை உயர்த்தப்படும் ஆதிதிராவிடர் குடும்பங்களில் ஏற்படும் இறப்புக்கான ஈமச்சடங்கிற்கான நிதி உதவி, 2,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்சுகாதாரத்துறை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை, 10 கோடி ரூபாயில் துவக்கப்படும். நடப்பாண்டு, 500 புதிய அவசர கால ஊர்திகள், 125 கோடி ரூபாயில் வாங்கப்படும். கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு இடையே, தன் சுத்தத்தை ஊக்குவிக்க, மாதவிடாய் கால தன் சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 37.47 கோடி ரூபாய் செலவில், நகர்ப்புறத்தில் படிக்கும் பள்ளி மாணவியருக்கும் விரிவுபடுத்தப்படும்தொழில் துறை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொழில் பூங்காவில், 770 கோடி ரூபாயில், மருந்தியல் தொழிற்பூங்கா அமைக்கப்படும் சிறுசேரி, நாவலுார் ஏரியை துார்வாரி ஆழப்படுத்துவதுடன், பூந்தோட்டத்துடனான இயற்கை பூங்கா, 50 கோடி ரூபாயில் அமைக்கப்படும் சென்னைக்கு அருகே, சிப்காட் மாநல்லுார் தொழிற்பூங்காவில், மின்சார வாகனப் பூங்கா, 148 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்செய்தித்துறை துாத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள, சுதந்திர போராட்ட வீரர் வெள்ளைய தேவன் மணிமண்டபத்தில், அவரது முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் பத்திரிகையாளர் பணிக்காலத்தில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட, மருத்துவ நிதியுதவி, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் துாத்துக்குடி மக்களால், 'மக்களின் தந்தை' என்று போற்றப்படும், ராவ் பகதுார் குரூஸ் பர்ணாந்தீஸ் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான, நவம்பர், 15 அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.சட்டசபை /

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X