அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதியம் ரூ.25,000!

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : ''முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பரமசிவம் பேசுகையில், ''எம்.எல்.ஏ.,க்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.''அதை உயர்த்தி வழங்க வேண்டும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதியத்தை, உயர்த்தி வழங்க வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு சென்னையில், மானிய விலையில் வீடுகள் வழங்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதில் அளித்த முதல்வர், வெளியிட்ட அறிவிப்புகள்: எம்.எல்.ஏ.,க்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும், 2 லட்சம் ரூபாய், 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கான, மாத குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 12 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும், மருத்துவப்படி, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவை அனைத்தும், ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மேலவை முன்னாள் உறுப்பினர்கள், இனிமேல், படுக்கை வசதி உடைய, 'ஏசி' பஸ்களில், இலவசமாக செல்லஅனுமதிக்கப்படுவர். அவர்களின் வாழ்க்கை துணை அல்லது உதவியாளர், 'ஏசி' இருக்கை வசதி உடைய பஸ்களில் மட்டும், பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.சட்டசபை /

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X