கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் ரூ.15 ஆயிரம் வழங்க வழக்கு அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :'கொரோனா' வைரஸ் தணியும் வரை, ரேஷன் கார்டு ஒன்றுக்கு, ௧௫ ஆயிரம் ரூபாய் வழங்க கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ௨௦ ஆயிரம் கோடி ரூபாய்க்கான சிறப்பு நிவாரண திட்டத்தை, கேரள அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில், இந்த நிவாரண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

.அமைப்புசாரா தொழிலாளர்கள், குறிப்பாக தினக்கூலிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சமூக விலகலால், அவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வருமானம் இல்லை.விளிம்பு நிலை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. கொரோனா வைரஸ் தணியும் வரை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, ௧௫ ஆயிரம் ரூபாய் வழங்கவும், கிருமி நாசினி, முக கவசங்களை, வீடுகளுக்கு நேரடியாக வழங்கவும், உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரி, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் முறையிடப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''அரசு தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை,'' என்றார்.இதையடுத்து, அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான நடைமுறைப்படி பட்டியலில் வந்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X