அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி புதிய மாவட்டம்: ஜெயராமன் கோரிக்கை

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை ''பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்,'' என, துணை சபாநாயகர், ஜெயராமன் கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:துணை சபாநாயகர் ஜெயராமன்: பொள்ளாச்சி தாலுகாவில் உற்பத்தியாகும், தென்னை நாரில் பெருமளவு, சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 'கொரோனா' காரணமாக, சீன நாட்டிற்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தொழிலில் ஈடுபட்டவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை மற்றும் வட்டித்தொகை செலுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்படுகின்றனர்; அவர்களுக்கு உதவ வேண்டும்.அமைச்சர்பெஞ்சமின்: வங்கி கடனை சீரமைக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஜெயராமன்: பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, பொள்ளாச்சி மாவட்டத்தை, புதிதாக அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: இது தொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். எனவே, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்.ஜெயராமன்: பொள்ளாச்சி நகராட்சி உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே, பொள்ளாச்சி நகராட்சியை, மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சி, நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ள தால், 100 கோடி ரூபாயை, சிறப்பு நிதியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.சட்டசபை/

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
25-மார்-202007:02:23 IST Report Abuse
chakra திருட்டு ஜெயராமன் பிள்ளை மேல் இருந்த குற்றச்சாட்டுகள் என்னவாயின பொள்ளாச்சி சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X