அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல் முறையாக ஒரே நாளில் 27 துறைக்கு மானிய கோரிக்கை

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
Corona, கொரோனா, மானியகோரிக்கை, சட்டசபை, விவாதம், முதல்வர்

சென்னை:சட்டசபையில் முதல் முறையாக, நேற்று ஒரே நாளில், 27 மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்தது.

கொரோனா பீதி காரணமாக, ஏப்ரல், 9 வரை நடக்கவிருந்த, சட்டசபை கூட்டத் தொடர், நேற்றுடன் முடிக்கப்பட்டது. இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில், 27 துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடத்தப்பட்டது.முதல்வர், துணை முதல்வர் வசம் உள்ள துறை கள் உட்பட, 27 துறைகளின் மானிய கோரிக்கை மீது,ஒரே நாளில் விவாதம் நடத்தப்பட்டது, இதுவே முதல் முறை.

இதற்கு முன், 2004ல் ஜெ., முதல்வராக, காளிமுத்து சபாநாயகராக இருந்த போது, ஒரே நாளில், 24 துறைகளின் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடத்தப்பட்டுள்ளது.நேற்று, 27 துறைகளின் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்ததால், அனைத்து அமைச்சர்களின் பதிலுரைகள், துறை அறிவிப்புகள் படிக்கப்படாமல், சபையில் படிக்கப்பட்டதாக, பதிவு செய்து கொள்ளும்படி, முதல்வர் அறிவித்தார்.

பல்வேறு துறைகளில், 110 விதியின் கீழ், 82 அறிவிப்புகளை, முதல்வர் படிக்காமலே, சபையில் பதிவு செய்து கொள்ளும்படி, சபாநாயகரிடம் தெரிவித்தார். சபாநாயகரும், 'பதிவு செய்து கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X