அரசியல் செய்தி

தமிழ்நாடு

10 ஆயிரத்து, 758 அடுக்குமாடி குடியிருப்புகள் துணை முதல்வர் அறிவிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement



சென்னை,:''அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1,131 கோடி ரூபாய் செலவில், சென்னை உள்ளிட்ட நகரங்களில், 10 ஆயிரத்து, 758 அடுக்குமாடி குடியிருப்புகள்கட்டப்படும்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் அறிவித்தார்.சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:பொதுத்துறை சிந்தாதிரிப்பேட்டை அரசு விருந்தினர் இல்லம், 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டப்படும் வெளிநாடு வாழ் தமிழர் குடியேற்றம் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், அசாதாரண நிகழ்வுகளில் இறக்கும் போது வழங்கும் நிவாரணம், 50 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இலங்கை அகதிகள் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்வீட்டு வசதி வாரியம் சென்னையில் சுயநிதி திட்டத்தின் கீழ், 55.4 கோடி ரூபாயில், 92 குடியிருப்புகள்; நெற்குன்றத்தில், 419 கோடி ரூபாயில், 570 குடியிருப்புகள் கட்டப்படும். வேலுார், நாமக்கல் மாவட்டங்களில், 5.56 கோடி ரூபாய் மதிப்பில், 135 மனைகள்; சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 19.16 கோடி ரூபாய் மதிப்பில், 277 மனைகள்; மதுரை மாவட்டத்தில் தத்தநேரி, எல்லிஸ்நகர், உச்சப்பட்டி ஆகிய இடங்களில், 13.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 425 மனைகள் மேம்படுத்தப்படும் கோவை மாவட்டத்தில், 2,102 மனைகள், 117.2 கோடி ரூபாய்; திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 978 மனைகள், 36.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் சென்னையில், பெசன்ட்நகர், திருவான்மியூர், சி.ஐ.டி.,நகர் ஆகிய இடங்களில், 139 கோடி ரூபாயில்; கோவை மாவட்டம், குறிச்சியில், 13.7 கோடி ரூபாயில், வணிக வளாகம் கட்டப்படும் திருச்சி வராகநேரியில், சுயநிதி திட்டத்தின் கீழ், 63.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 180 குடியிருப்புகள் கட்டப்படும்குடிசை மாற்று வாரியம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை உள்ளிட்ட நகரங்களில், 1,131 கோடி ரூபாயில், 10 ஆயிரத்து, 758 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் சென்னை, திருமங்கலத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், வணிக வளாகம் கட்டப்படும்கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சென்னை குன்றத்துாரில், 52 ஏக்கர், பூந்தமல்லியில், 8 ஏக்கர்; பெருங்களத்துாரில், 28.2 ஏக்கர் பரப்பளவில், மனைப்பிரிவு திட்டம் ஏற்படுத்தப்படும்சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள், 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த, பல்லடுக்கு வாகன நிறுத்தம் உருவாக்கப்படும் வெளிவட்ட சாலை திறனை, முழு அளவில் பயன்படுத்த ஏதுவாக, அதை ஒட்டியுள்ள, 50 மீட்டர் நிலப்பகுதி மேம்படுத்தப்படும்.இவ்வாறு, துணை முதல்வர், பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X