அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் புத்தொழில் நகரம்: திருத்தணியில் புதுபாதை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :''ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயதை கடந்து, ஓய்வுபெற்ற கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சிறுதொழில் துறை
*சென்னையில், 350 கோடி ரூபாயில், புத்தொழில் மற்றும் புத்தாக்க நகரம் அமைக்கப்படும். கோவை மாவட்டம், கல்லப்பாளையம் கிராமத்தில், 116.24 ஏக்கர் பரப்பளவில், 21 கோடி ரூபாயில், புதிய தனியார் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அரசு மானியமாக, 10 கோடி ரூபாய் வழங்கப்படும்பால்வள துறை
*துாத்துக்குடி மாவட்டத்தில், 40 கோடி ரூபாயில், தேனி மாவட்டத்தில், 58 கோடி ரூபாயில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்படும். 20.87 கோடி ரூபாய் மதிப்பில், 180 உயர் ரக பொலி காளைகள் தயார் செய்யப்படும் திருவண்ணாமலை, மாதவரம், சோழிங்கநல்லுார், அம்பத்துார் பால் பண்ணைகளில், பால் பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்த, 119.26 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்அறநிலைய துறை*தொன்மை வாய்ந்த, 55 கோவில்களில், 50 கோடி ரூபாயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வசதி மிக்க, 50 கோவில்களில், 4 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் ஜோடிகளுக்கு, இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். 8.77 கோடி ரூபாய் மதிப்பில், 'திருக்கோவில்' என்ற பெயரில், 'டிவி' துவக்கப்படும்
* திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில், 8.50 கோடி ரூபாயில், புதிய மலைப்பாதை அமைக்கப்படும். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த, 2,000 தொகுப்பூதிய பணியாளர்கள், தகுதி அடிப்படையில், நிரந்தரம் செய்யப்படுவர் ஓய்வுபெற்ற நிரந்தர பணியாளர்களுக்கான, துறை நிலையிலான ஓய்வூதியம், 2,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஒன்பதுமுதுநிலை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, 16.43 கோடி ரூபாய் செலவில், நாள் முழுவதும், பிரசாதம் வழங்கப்படும்*அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயதை கடந்து, ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
வேளாண்மை துறை

* சாகுபடி பரப்பை அதிகரிக்க, 25 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை, சாகுபடிக்கு ஏற்றதாக மாற்ற, 10.40 கோடி ரூபாய் வழங்கப்படும். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 'பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்' அமைக்கப்படும்*கும்பகோணத்தில், வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம், 3 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில், 7,500 ஏக்கர் பரப்பளவில், 33 கோடி ரூபாய் மதிப்பில், உயர் தொழில்நுட்ப தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் இயற்கை பண்ணை முறையில், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் முறையை, விவசாயிகளிடம் ஊக்குவிக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தோட்டக் கலை விவசாயிகளை ஊக்குவிக்க, நடப்பாண்டில், 25 கோடி ரூபாயில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்அறிமுகப்படுத்தப்படும்
* தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, 50ம் ஆண்டு நிறைவை ஒட்டி, பழைய கட்டடங்களை புதுப்பிக்க, நினைவு மண்டபம் கட்ட, கருத்தரங்கு நடத்த, 29.86 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்உயர் கல்வித் துறை

* தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு, 'ஜெயலலிதா வளாகம்' என பெயரிடப்பட்டு, அவ்வளாகத்தில், ஜெயலலிதா சிலை அமைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X