அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிரிகளை வீழ்த்தாமல் விட்டதில்லை!: சட்டசபையில் முதல்வர் பேச்சு

Added : மார் 24, 2020
Share
Advertisement


சென்னை ''எதிரிகள் எப்போதும் நம்மை வென்றதுமில்லை; அவர்களை வீழ்த்தாமல், நாம் எப்போதும் விட்டதுமில்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், அவரது பதிலுரை:தமிழகத்தில், 2005 இறுதியில், 1,440 கொலை மற்றும் ஆதாய கொலை வழக்குகள் இருந்தன.இவை, 2010ல், தி.மு.க., ஆட்சியின் இறுதியில், 1,868 ஆக உயர்ந்தன. தற்போது, இந்த வழக்குகள், 1,745 ஆக குறைந்துள்ளன. தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும், 5.9 சதவீதம் அதிகரித்து வந்த வழக்குகள், அ.தி.மு.க.,வின், ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், 0.7 சதவீதமாக குறைந்துள்ளன.தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கைப்படி, இந்த வழக்குகளில், தமிழகம், ஏழாவது இடத்திலும், குற்ற விகிதத்தில், 13வது இடத்திலும் தான் உள்ளது. வன் குற்றங்களில், 12வது இடம்; உடல் சார்ந்த குற்றங்களில், ஆறாமிடம்; சொத்து தொடர்பான குற்றங்களில், எட்டாவது இடத்தில் தான் தமிழகம் உள்ளது. மொத்த குற்றங்களை பொறுத்தவரை, 2018ம் ஆண்டு, உ.பி.,யில் அதிகபட்சமாக, 5.85 லட்சம் வழக்குகளும், மஹாராஷ்டிராவில், 5.15 லட்சம் வழக்குகளும் தாக்கலாகி உள்ளன. தமிழகத்தில், 4.99 லட்சம் வழக்குகள் மட்டுமே தாக்கலாகி உள்ளன. குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதிலும், திருட்டுபோன பொருட்களை மீட்பதிலும், போலீசார் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். ஒன்பது ஆண்டுகளாக, கொலை உள்ளிட்ட சொத்து தொடர்பாக தாக்கலான, 1.99 லட்சம் வழக்குகளில், 1.38 லட்சம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 70 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. திருடுபோன, 66 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.போலீசார் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பயங்கரவாத செயல்கள் நடக்காமல் பார்த்து வருகின்றனர்.மத நல்லிணக்கத்தை பேணிக்காத்து, மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாமல் பார்த்து வருகின்றனர். நம் மாநிலம், வாகன விபத்தை குறைப்பதிலும், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதிலும், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தத்தில் வெல்வது எப்படி என்று, கற்று தந்தவர் ஜெயலலிதா.எதிரிகள் எப்போதும் நம்மை வென்றதுமில்லை; அவர்களை வீழ்த்தாமல், நாம் எப்போதும் விட்டதுமில்லை. 2021ல் பெறப்போகும் வெற்றி, பொன் எழுத்துக்களால் பதிக்கப்போகும் வெற்றி.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X