சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பு 15 ஆக அதிகரிப்பு 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :சென்னையில், இளம்பெண் உட்பட, மேலும் மூன்று பேருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாதிப்பு, 15 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது.ஸ்பெயினில் இருந்து வந்த கோவை மாணவி, அமெரிக்காவில் இருந்து வந்த மூதாட்டி, தாய்லாந்தை சேர்ந்த, இரண்டு பேர் உட்பட, 12 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், ஓமன் நாட்டில் இருந்து வந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர், சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்த, போரூரை சேர்ந்த, 74 வயது முதியவர்; புரசைவாக்கத்தை சேர்ந்த, 52 வயது பெண்; சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த, கீழ்கட்டளையை சேர்ந்த, 25 வயது பெண் ஆகியோருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், போரூரை சேர்ந்த முதியவரும், புரசைவாக்கத்தை சேர்ந்த பெண்ணும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்கட்டளையை சேர்ந்த இளம்பெண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், கொரோனா பாதிப்பு, 15 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து, சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸால், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்பில் இருந்த, 1,000க்கும் மேற்பட்டோர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டவர்களுக்கு, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் வந்தவர்களுக்கு மட்டுமே, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

. ஆனால், மதுரையை சேர்ந்த, 54 வயதுடையவர், எப்படி வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை; அதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மதுரையில் சிகிச்சை பெறும், 54 வயது ஆண்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள, 64 வயது மூதாட்டி; போரூரை சேர்ந்த, 74 வயது முதியவர் ஆகிய, மூன்று பேரின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.743 பேரிடம் பரிசோதனைபல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 2.9 லட்சம் பேர் வந்துள்ளனர்.

அவர்களில், 15 ஆயிரத்து, 298 பேர் தங்கியிருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 743 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 608 பேருக்கு பாதிப்பு இல்லை; 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் முடிவுகள், ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X