அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சிகளுக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு : கொரோனா தடுப்பு பணி

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :''கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் கட்டமாக, 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த, ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக துறை செயலர், ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர், பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், அமைச்சர் கூறியதாவது:

* பொது மக்களிடம் நோய் தொற்று தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
* கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சிக்கு, 4 கோடி ரூபாய்; நகராட்சி நிர்வாகத்திற்கு, 6 கோடி ரூபாய்; பேரூராட்சிகளுக்கு, 2 கோடி ரூபாய்; ஊரக வளர்ச்சித் துறைக்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

* அனைத்து தலைமை அலுவலகங்களிலும், கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன அனைத்து மாவட்டங்களிலும், பொது இடங்களை சுத்தப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த குறும்படங்களை, பரவலாக ஒளிபரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி துறையில், 90 ஆயிரத்து, 23 களப் பணியாளர்கள், 1.24 லட்சம் துாய்மைப் பணியாளர்கள், 708 கண்காணிப்பு அலுவலர்கள், துாய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் .இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X