பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர ஒழுங்கு மண்டலம் விதிமீறல் கட்டடங்களில் ஆய்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 கடலோர ஒழுங்கு மண்டலம் விதிமீறல் கட்டடங்களில் ஆய்வு

மாமல்லபுரம்;கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில், விதிமீறல் கட்டடங்களை, நில அளவைத் துறையினர் அளவிட்டனர்.
கடற்கரை பகுதியில், கட்டடம் கட்டுவதை தடுக்க, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரையறையை, அரசு செயல்படுத்துகிறது. கடற்கரையிலிருந்து, 200 மீட்டருக்குள், கட்டடம் கட்டக்கூடாது என்பது விதி. இப்பகுதியில் தடையும் உள்ளது.பண்ணை வீடுகள்சென்னை புறநகர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இவ்விதியை புறக்கணித்து, அனுமதியற்ற தடை பகுதியில், பண்ணை வீடுகள் அதிகரிக்கின்றன.முட்டுக்காடு பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து, தொடரப்பட்ட வழக்கில், கட்டடத்தை இடிக்கவும், விதிமீறல் குறித்து, அறிக்கை அளிக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கணக்கெடுப்புஇந்நிலையில், மாமல்ல புரம் உள்ளூர் திட்டக் குழும எல்லை பகுதிக்குட்பட்ட, கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு பகுதி வரை, கடற்கரையிலிருந்து, 200 மீ., தொலைவை, நில அளவைத் துறையினர் அளவிட்டனர். இப்பகுதியில், விதிமீறல் கட்டடங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X