பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருட்களை சேமிக்க ஒரு மாதம் இலவசம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை :'ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, ஒரு மாத காலம், எவ்வித வாடகையுமின்றி, சேமித்து வைக்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து ஏப்ரல், 1 வரை, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும், அனைத்து வகையான போக்குவரத்தும், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது

.தற்போது, நெல், நிலக்கடலை போன்ற பயிர்களின், அறுவடை பணி நடந்து வருகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விற்பனை செய்வதற்காக, அதிக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வியாபாரிகள் வருகை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில், வாடகை இல்லாமல், விவசாயிகள் விளைபொருட்களை, 30 நாட்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.பொருளீட்டு கடன் பெறும்போது, நடைமுறையில் உள்ள, 15 நாட்கள் வட்டியில்லா கடன் என்பதை, ஒரு மாதம் நீட்டிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், விவசாயிகள், விளைபொருட்களை, சேமிப்பு கிடங்குகளில் பாதுகாத்து, பின்னர் விற்பனை செய்யலாம்.சேமிப்பு கிடங்குகளில், பாதுகாப்பாக வைத்துள்ள, விளைபொருட்களின் அன்றாட சந்தை விலையில், 75 சதவீதம், அதாவது, 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், பொருளீட்டு கடன் பெற முடியும். இதை திருப்பி செலுத்துவதற்கு, அதிகபட்ச கால அளவு, 184 நாட்கள். இதற்கு, ௫ சதவீதம் வட்டி செலுத்தினால் போதும்.விளைபொருட்களை அடமானத்தில் வைத்தது முதல், 15 நாட்கள், வட்டி வசூலிக்கப்படாது. தற்போதுள்ள சூழ்நிலையில், 30 நாட்களுக்கு, வட்டி செலுத்த தேவையில்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X