பொது செய்தி

தமிழ்நாடு

மலேஷியாவில் தவித்த இந்தியர்கள் வருகை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை, பன்னாட்டு விமானங்கள் சேவை இல்லாததால், மலேஷியாவில் சிக்கித் தவித்த, 113 இந்தியர்கள், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்க, சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பன்னாட்டு விமான போக்குவரத்திற்கு, ஒரு வாரமாக, மத்திய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இதனால், மலேஷியாவிற்கு சுற்றுலா சென்ற, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.மத்திய அரசின் முயற்சியால், மலேஷியாவில் சிக்கித் தவித்த, 113 பேர், நேற்று பகல், 11:40 மணிக்கு, 'ஏர் ஏஷியா' சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின் அவர்களில், 109 பேர், தாம்பரத்தில், இந்திய விமான படை தளத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு, 14 நாட்கள் தீவிர கண்காணிப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில், ஒன்பது பேர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களை சந்திக்க வந்த உறவினர்களுக்கு, பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். 113 பேரும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே விமானம், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, மலேஷியா சென்றது. அந்த விமானத்தில், இந்தியாவில் தவித்த, மலேஷிய நாட்டினர், 184 பேர் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X