பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் விலை 5 மடங்கு உயர்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 முக கவசம் விலை 5 மடங்கு உயர்வு

உத்திரமேரூர்;முக கவசத்தின் விலை, மூன்று முதல், ஐந்து மடங்காக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உத்திரமேரூர் மக்கள் சிரமப்படுகின்றனர்.
உத்திரமேரூரில், பொதுமக்கள், முக கவசம் அணிய துவங்கியுள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால், உத்திரமேரூரில், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று முதல், ஐந்து மடங்காக, முக கவசத்தின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.கடந்த மாதம் வரை, தரத்திற்கேற்ப, மூன்று கவசம் அடங்கிய ஒரு பாக்கெட், 15 முதல், முதல், 30 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது, ஒரு கவசம் மட்டும், 25 முதல், 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விலை உயர்வு குறித்து, மருந்தக உரிமையாளர்களிடம் கேட்டபோது, 'முக கவசம் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தியதால், நாங்களும் விலையை உயர்த்த வேண்டியுள்ளது' என, பதில் கூறுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான முக கவசத்தை, அதிக விலைக்கு விற்கும் மருந்தகங்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X