பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் காஸ் சிலிண்டர் அவசர முன்பதிவு வேண்டாம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை 'சமையல் காஸ் சிலிண்டர்களை, அச்சத்தில் அவசர முன்பதிவு செய்ய வேண்டாம்' என, வாடிக்கையாளர்களுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜெயதேவன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம், இயல்பான நிலையில் இயங்கி வருகிறது.

அச்சத்தில், சிலிண்டர்களுக்கு அவசர முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.காஸ் சிலிண்டருக்கு அடிப்படை தேவைகளான மொத்த காஸ் கொள்முதல், நிரப்புதல் மற்றும் வினியோக போக்குவரத்து, எவ்வித தடையும் இன்றி இயங்கி வருகிறது; சிலிண்டர்கள் சப்ளை தடங்கல் இன்றி நடக்கும்.தினசரி வாழ்க்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்களில், தேவையற்ற அவசர சிலிண்டர் முன்பதிவுகள், உண்மையிலேயே சிலிண்டர் தேவைப்படுவோருக்கு, சரியான நேரத்தில், சப்ளை செய்ய முடியாத நிலையை உருவாக்கி விடும்.
இதனால், வாடிக்கையாளர்கள், தங்களின் முன்பதிவுக்கு ஏற்றார் போல், இயல்பான முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.தமிழகம், புதுச்சேரியில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும், பெட்ரோல் பங்க்கள், வரும் நாட்களில், வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X