பொது செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி குடிநீர்: வாரியம் ஏற்பாடு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை பொது மக்களுக்கு குழாய் வழியே, குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டால், 'டேங்கர்' லாரி வாயிலாக, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர், மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிவிப்பு:தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, 144 தடை உத்தரவில் இருந்து, குடிநீர் வாரியத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் சுழற்சி முறையில், 'கொரோனா வைரஸ்' பரவாத வகையில், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று, குடிநீர் வழங்க வேண்டும்.குடிநீர் அளவு மற்றும் தரத்தை, அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் மற்றும் பழுதுகளை, உடனுக்குடன் சரி செய்ய, தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மின் மோட்டார் மற்றும் குழாயில் பழுது ஏற்பட்டு, குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக, டேங்கர் லாரி வாயிலாக, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க, அனைத்து பணியாளர்களுக்கும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தலைமை நீரேற்றும் நிலையம், நீர் சேமிப்பு நிலையம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி போன்ற இடங்களில், தெரியாத நபர்களையோ, சந்தேகத்திற்குரிய நபர்களையோ, அனுமதிக்க கூடாது.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் செயல்படும், மாவட்ட குடிநீர் பரிசோதனை மையங்களில், பொது மக்கள், குடிநீர் தரத்தை பரிசோதிக்கலாம்.குறைபாடு இருந்தால், 94458 02145 என்ற, மொபைல் போன் எண்ணிலும், குடிநீர் வாரியம் இணையதளத்திலும், தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X