பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் கொண்டாடுங்கள் தமிழக கவர்னர் அறிவுரை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை 'தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மொழி பேசும் மக்கள், வீடுகளிலேயே விழாவை கொண்டாடுங்கள்' என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தி:யுகாதி, குடிபட்வா, செடி சந்த் பண்டிகைகளையொட்டி, தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, கன்னடம், மாரத்தி, சிந்தி மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்நாளில், நாம் அனைவரும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பாதையில், சிறப்புடன் பயணிக்க, நம்மை நாமே அர்ப்பணித்து கொள்வோம்.தற்போது, கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், விழாவை கொண்டாடுவோர், அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.மத்திய -- மாநில அரசுகள் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைப்பிடியுங்கள். வீட்டில் தனித்திருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்.இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X