பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதியில் கவனம் தேவை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதியில் கவனம் தேவை

ஸ்ரீபெரும்புதுார்;கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்பு எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், சுங்குவார்சத்திரம், வல்லம், ஒரகடம் என, ஆறு இடங்களில், 'சிப்காட்' தொழிற்பூங்கா உள்ளன. இங்கு, பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்கள், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தைச் சேர்ந்த கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம், காட்டரம்பாக்கம், மாம்பாக்கம், மாத்துார், வெங்காடு உள்ளிட்ட கிராமங்களில், அதிக அளவில் வசிக்கின்றனர்.
குறைந்த இட வசதி உடைய இடத்தில், நெருக்கடியான வீட்டில் தங்குகின்றனர். இவர்கள், சுகாதார விஷயங்களில் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மூன்றாம் நிலை கொரோனா பரவல் ஏற்பட்டால், இவர்களால் அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X