பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு 3 படுக்கை அறை; உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 கொரோனா நோயாளிகளுக்கு 3 படுக்கை அறை; உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக, அமைக்கப்பட்டுள்ள மூன்று படுக்கை அறைகளை, மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரி, ஆய்வு செய்தார்.

தமிழகத்தில், நேற்று மாலை முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக, மூன்று படுக்கை அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த அறைகளை மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடக்கை பணியை, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் கஸ்துாரி, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X